மைசூருவில் நடைபெற்ற பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் சித்தராமையா பேசியதாவது: மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்த பின் 5 ஆண்டுகளில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு 15 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் தற்போது 17 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 12.50 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு வந்துள்ளது போல் பண பரிவர்த்னையையும் ஆன்லைன் திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் முலம் மக்கள் பயன் அடைவார்கள் என்று நம்புவதாக கூறினார்..
ஆன்லைன் மூலம் ஏ.பி.எம்.சி பண பரிவர்த்தனை: முதல்வர் தகவல்
மைசூருவில் நடைபெற்ற பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் சித்தராமையா பேசியதாவது: மாநிலத்தில் காங்கிரஸ்
unknown node