புதுடில்லி: ஊழல் புகாரில் சிக்கியுள்ள பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலிடம் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி, லாலு வீடுகளில் சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் நிதிசும், தேஜஸ்வி பதவி விலக கெடு விதித்திருந்தார். ஆனால், தேஜஸ்வி பதவி விலக மறுத்துவிட்டார். லாலுவும், தேஜஸ்வி பதவி விலக மாட்டார் எனக்கூறி வருகிறார். இந்நிலையில், நிதிஷ்குமார், நேற்று டில்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை சந்தித்து பீஹார் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: நிதிஷ், ராகுலை சந்தித்தபோது, தேஜஸ்வி மீதான ஊழல் புகார் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும். அவர் நிச்சயம் பதவி விலக வேண்டும் எனக்கூறினார். ஆனால், இதற்கான காலக்கெடு குறித்து நிதிஷ் எதுவும் கூறவில்லை. இருப்பினும் தேஜஸ்வி குறித்த இறுதி முடிவை நிதிஷ் அடுத்த வாரம், ஜூலை 28 ல் சட்டசபை துவங்குவதற்கு முன்னர் எடுப்பார். இவ்வாறு டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் :முதல்வர் நிதிஷ்குமார்
புதுடில்லி: ஊழல் புகாரில் சிக்கியுள்ள பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலிடம் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்
unknown node