நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள் . நெத்திலி மீன் -கால் கிலொ சின்ன வெங்காயம் - 15  தக்காளி - 4  பச்சை மிளகாய் - 3  மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன்  மஞ்சள்

unknown node

தேவையான பொருள்கள் .

நெத்திலி மீன் -கால் கிலொ

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 4

பச்சை மிளகாய் – 3

மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தனியாத் தூள் -1 ஸ்பூன்

நசுக்கிய பூண்டு – 6 பல்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் -கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

புளி – சிறிதளவு

தேங்காய்பால் – கால் கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

நெத்திலி மீனை முள் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து கொண்டு விரலால் நடுவில் கீறினால் முள்ளை அப்படியே எடுத்து விடலாம்

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை சற்று கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் நசுக்கிய பூண்டை போட்டு சிறிது வதங்கியதும், வெங்காயம் போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளி போட்டு வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூளை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் நெத்திலி மீனையும், தேங்காய் பாலையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வந்து தொக்கு பதம் வந்ததும் இறக்கவும்.

சுவையான நெத்திலி மீன் தொக்கு ரெடி

நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி ?