தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது

இணையதளம் முடக்கம் மற்றும் கைது  கோவையில் இருந்து பல்வேறு ஐபி முகவரிகளால் இயங்கி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதள அலுவலகத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக

இணையதளம் முடக்கம் மற்றும் கைது

கோவையில் இருந்து பல்வேறு ஐபி முகவரிகளால் இயங்கி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதள அலுவலகத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அலுவலகத்தில் இருந்த சதீஷ், புவனேஷ் மற்றும் ஸ்ரீனி ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த வருடம்  டிசம்பரில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சேர்ந்த 3 பேர் கோவையில் கைது   செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் இணையதளமும் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானது

ஆனால் தற்போது வரை தமிழ் ராக்கர்ஸ் தளம் முடக்கப்படாமல் அப்படியே தான் உள்ளது.அவர்கள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மூலம் தங்களுக்கு தேவையான இணையதள முகவரிகளை வாங்கி படத்தை சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டு வருகின்றனர்.

பல கோடி வருமானம்

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முன்போ அல்லது வெளியான சில மணி நேரங்களிலோ அந்த திரைப்படம் திருட்டுத்தனமாக வெளியாகும் இடம் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் என்பது அனைவரும் அறிந்ததே

unknown node

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும்  இந்த இணையதளம்  காவல்துறையினர்களால் கண்டுபிடிக்கப்பட்டும் முடக்கப்படவில்லை இதனால் நாம் நினைப்பது சினிமா கட்ணம் மிச்சம் என்றாலும் கோடி கணக்காக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் சம்பாதித்து வருகிறது இவர்கள் இதை வைத்து சமூக சேவை ஒன்றும் செய்யவில்லை

இழந்து வரும் பொழுது போக்கு

கடந்த சில வருடங்களா குடும்ப பொழுது போக்கு மிகவும் குறைந்து உள்ளது இதற்க்கு காரணம் இணையத்தளம் ,நாம் பணம் மிச்சம் என்று நினைக்கும் ஒரு இடத்தில் நம் சந்தோசங்களை இழக்கிறோம் அதற்க்கு சான்றே இது போன்ற  இணையதளம் .கடற்கரையில் விளையாடிய காலம் போய் கடல் போன்ற இணையத்தால் சிரழிந்து கொண்டு இருக்கிறது இந்த சமுதாயம் .

அரசாங்கத்தின் அக்கறையே தனி மனிதவாழ்க்கைக்கு  வளர்ச்சிக்கு காரணமாக இருக்க வேண்டும் பொருத்து இருந்து பார்போம் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று