புதுடில்லி: பீஹாரில் பா.ஜ.,வுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த விவகாரத்தில் அதிருப்தியுடன் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ், கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பீஹாரில் , ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங். என மெகா கூட்டணி அமைந்தது. இக்கூட்டணி சட்டசபைதேர்தலில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். துணை முதல்வர் தேஜஸ்வி மீதான ஊழல் விவகாரத்தை காரணமாக வைத்து கூட்டணியை உடைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் இரவோடு இரவாக பா.ஜ.வுடன் கைகோர்த்து மறுநாளே மீண்டும் முதல்வரானார்.கூட்டணியை மாற்றிய விவகாரத்தில் மூத்த தலைவரான சரத்யாதவ் கடும் அதிருப்தி வெளியிட்டார். கடந்த சில நாட்களாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த சரத்யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தில் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி நிதிஷிடமிருந்து பிரிந்து புதிய கட்சி துவக்கலாமா என யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.இந்நிலையில் வரும் 19-ம் தேதி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதற்கு முன்பாக வரும் 17-ம் தேதி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தினை கூட்டி புதிய கட்சியை துவக்குவது குறித்து, தனது நலம்விரும்பிகள், நண்பர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திட சரதயாதவ் திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்சி துவங்கும் எண்ணத்தில் சரத் யாதவ்....!
புதுடில்லி: பீஹாரில் பா.ஜ.,வுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த விவகாரத்தில் அதிருப்தியுடன் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ், கட்சியை விட்டு வெளியேறி
unknown node