புதுடில்லி : துணைத் தலைவராக இருக்கும் ராகுலை, தலைவராக்குவதற்கான வேலைகளை காங்., துரிதப்படுத்தி வருகிறது. இதற்காக இக்கட்சியின் தேர்தல் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 க்கு நடத்தப்பட உள்ளது.வரும் செப்டம்பர் மாதம் சோனியாவிற்கு பதில் ராகுல் காங்., தலைவராக பொறுப்பேற்பார் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம் காங்., பார்லி., குழுவின் தலைவர் பதவியை சோனியா வகிப்பார் எனவும், கட்சியின் முக்கிய விவகாரங்களை அவர் கவனிப்பார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ராகுல், காங்., தலைவராவதை கூட்டணி கட்சி தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்டோர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. கட்சியின் தலைமை பொறுப்பு ராகுல் கைக்கு போவதை விரும்பாத சில கூட்டணி கட்சிகள், காங்., கூட்டணியில் நீடிப்பதா என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ராகுலை தலைவராக்குவதில் சிக்கல்.....கூட்டணி கட்சிகள் போர்க்கொடி!
புதுடில்லி : துணைத் தலைவராக இருக்கும் ராகுலை, தலைவராக்குவதற்கான வேலைகளை காங்., துரிதப்படுத்தி வருகிறது. இதற்காக இக்கட்சியின் தேர்தல் செப்டம்பர் 15 முதல்
unknown node