குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி விதான சவுதாவில் வாக்களிப்பதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள், தங்களின் அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் அதிகாரி மூர்த்தி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
” குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்கு விதான சவுதா முதல் மாடியில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறை எண் 106ல் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குபதிவு செய்யலாம். வாக்குச்சீட்டில் ஒன்று என்று நம்பரால் குறிப்பிட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக வாக்குகளை அளிக்கும் நபர்களுக்கு 2, 3, என்று நம்பரால் தங்களின் விருப்பத்தை பதிவு செய்ய முடியும். வாக்குச்சீட்டில் கையெழுத்திடுவதோ அல்லது வேறு ஏதாவது எழுதினாலோ அந்த வாக்கு செல்லாததாகி விடும் என்றார்