ரஜினி படம் ரிலீஸாகும்போது ஏதாவது ஒரு வித்தியாசமான விளம்பர யுக்தியை தயாரிப்பாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
‘
எந்திரன்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், மலேசியாவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் ஆடியோ விழாவை நடத்தியது.
‘கபாலி’ பட புரமோஷனுக்காக விமானத்தில் கபாலி வளம்பரத்தை பெயிண்டிங் செய்ய வைத்தார் தயாரிப்பாளர் தாணு.
‘2.0’ படத்திற்காக சமீபத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், தன் பங்குக்கு ‘2.0’ படத்தை புரமோட் செய்ய சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் நடிகர் ஆர்யா.
ஜூலை 30 முதல் 1450 கி.மீ. தூரம் சைக்களிலிலேயே பயணம் செய்ய உள்ளார் ஆர்யா.அவருடைய பயணத்துக்கு ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைகா ஸ்பான்ஸர் செய்கிறது.எனவே 2.0 படத்திற்காக விளம்பரம் செய்தபடி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்