புதுடில்லி: ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை உற்பத்தி செய்து, வழங்கும் வெடிமருந்துகள் தரமானதாக இல்லை என சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2015க்கு பின், நிலவி வரும் வெடிமருந்து பற்றாக்குறையில் தொடர்கிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகளும் தரமானதாக இல்லை. அங்கு உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகளில் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. வேறு சில தொழிற்சாலைகளிடமிருந்து வெடிமருந்து வாங்க கடந்த 2009 – 13ல் ராணுவ தலைமையகம் எடுத்த நடவடிக்கை, கடந்த ஜனவரி 2017 வரை இன்னும் நிலுவையில் தான் உள்ளது.வான் வழியாக கண்காணிப்பு திட்டத்திற்காக டிஆர்டிஓ ரூ.6.20 கோடி மதிப்பிலான பலூன் வாங்கியுள்ளது. இந்த திட்டம் குறிப்பிட்ட இலக்கை இன்னும் அடையவில்லை. ஆனால், இதற்காக ரூ.49.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஆவடியில் உள்ள தொழிற்சாலையில், ராணுவத்திற்கு தேவைப்படும் டி – 72 பீரங்கிகளை உற்பத்தி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகளும் தரமானதாக இல்லை!!
புதுடில்லி: ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை உற்பத்தி செய்து, வழங்கும் வெடிமருந்துகள் தரமானதாக இல்லை என சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பார்லிமென்டில் தாக்கல்
unknown node