unknown node
எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை, ரஜினி நடித்த உழைப்பாளி, அஜித் நடித்த வீரம் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்சன்ஸ்.
இதே நிறுவனம் தயாரித்த விஜய் நடித்த பைரவா படம் இந்தாண்டு ஆரம்பத்தில் வெளியானது.
இந்நிலையில் தன் அடுத்த படத்தை தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துவிட்டதாம்.
இப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க கே.வி. ஆனந்த் இயக்கவிருக்கிறாராம்.
இப்படம் அயன் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்பது கொசுறு தகவல்.
துருவ நட்சத்திரம், ஸ்கெட்ச், சாமி2 ஆகிய படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் விக்ரம் என சொல்லப்படுகிறது.