விவேகம் படத்தின் நாயகிகள் இடையே மோதலா...?

சென்னை: அஜீத் நடித்துள்ள 'விவேகம்' விரைவில் திரைக்கு வர தயாராகிறது.சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படம் ஹாலிவுட் தொழில் நுட்பத்துடன் வெளிநாடுகளில் படமாகி

unknown node

சென்னை: அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ விரைவில் திரைக்கு வர தயாராகிறது.சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படம் ஹாலிவுட் தொழில் நுட்பத்துடன் வெளிநாடுகளில் படமாகி இருக்கிறது.

இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அஜீத்தின் மனைவி வேடத்தில் வருகிறார். இந்த படத்தில் உலகநாயகன் கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இருவரும் ஒரே படத்தில் நடித்தாலும் நட்பை வளர்க்கும் அளவுக்கு நெருங்கி பழகவில்லை.

இதனால் தான் காஜல் அகர்வாலும், அக்ஷரா ஹாசனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் குறைவாகவே உள்ளன. எனவே இருவரும் படப்பிடிப்பின் போது ஒரே இடத்தில் சந்தித்த நாட்கள் மிககுறைவு. அப்படியே, சந்தித்தாலும் ‘ஹாய்’ சொல்வதுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.

கடைசிநாள் படப்பிடிப்பின் போது இருவரும் செல்பி எடுத்துக் கொண்டு விடைபெற்றனர். வழக்கமாக ஒரு படத்தில் 2 நடிகைகள் சேர்ந்து நடித்தால் தோழிகள் ஆகி விடுவார்கள். இதில் பிரபல நடிகைகள் 2 பேர் நடித்தும் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாதது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.