தூத்துக்குடி கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பெய்து வரும் மழையால் விளைநிலங்கள், இந்த நிலத்தின் ஓரங்கள், தரிசு நிலங்கள் மற்றும் குப்பை மேடுகளில் இயற்கை காளான் மலர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமே மலரும் இந்த இயற்கை காளான்களை காலை நேரத்தில் சூரியன் உதிக்கும்போது எறும்புகள் தின்று விடும். இதனால் இதன் ஆயுட்காலம் ஒரு இரவு மட்டுமே ஆகும். இந்த இயற்கை காளான்களை கிராம மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் விளைநிலத்தில் இருந்து எடுத்து, வீடுகளுக்கு கொண்டுசென்று சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். மேலும் குடல்புண் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் மருத்துவ குணம் இந்த இயற்கை காளான்களுக்கு உண்டு என்பதால் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டோரும் இதனை பயன்படுத்துகின்றனர். 2 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு இடி, மின்னலுடன் பெய்யும் மழையையும், இரவில் மலரும் இயற்கை காளான்களையும் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.
தூத்துக்குடியில் வளர்ந்த இயற்கை காளான் : கிராம மக்கள் மகிழ்ச்சி..!
தூத்துக்குடி கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பெய்து வரும் மழையால் விளைநிலங்கள், இந்த நிலத்தின் ஓரங்கள்,
unknown node