இதை சாப்பிட்டால், நடக்க மாட்டீங்க! அப்பறம் ஓடுவீங்க..?

சீதாப் பழம் சிறிய வகை மரமாக வளரும் தன்மையுடையது. தண்டுகள் மூலமும், விதைகள் மூலமும், எங்கும் எளிதில் வளரும் தன்மையுடையது.

unknown node

சீதாப் பழம் சிறிய வகை மரமாக வளரும் தன்மையுடையது. தண்டுகள் மூலமும், விதைகள் மூலமும், எங்கும் எளிதில் வளரும் தன்மையுடையது.

வைட்டமின், புரதம், மற்றும் இரும்புச் சத்து அதிகம் கொண்ட சீதாப்பழம் மிக உயர்வான மருத்துவப் பலன்கள் கொண்டது.

அதனால்தான் நாம் அதிகம் உபயோகிப்பதில்லை. இதன் பலன்களை நன்கு அறிந்த மேலைநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் நம்மிடமிருந்து இறக்குமதி செய்து மருந்துப்பொருட்கள் தயாரிக்கின்றன.

தாம் உபயோகித்து இதன் பலன்களை அனுபவிக்காவிட்டாலும் சீதாப்பழங்களை அதிகஅளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சிலர் பொருளாதாரத்தில் வளமான பலன்களை, அடைகின்றனர்.

unknown node

கஸ்டர்ட் ஆப்பிள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்னவென்று பார்ப்போமா?

இதயம் காக்கும் சீதாப்பழங்களின் தோல்நீக்கி விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை அப்படியே அல்லது ஜூஸாக அருந்தி வர, இதய நோய்கள் யாவும் அணுகாது வாழலாம்.

நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும். ஆரம்ப நிலை காசநோயை உடலிலிருந்து நீக்கும். மற்ற வகை காசநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

ஊளைச்சதையை குறைத்து, உடல் மெலிதாகி வனப்புடன் திகழ, சீதாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், விரும்பிய பலன்கள் கிட்டும்.

கோடைத்தாகம் நீக்கும். நாவறட்சி போக்கும். கோடைக்காலங்களில் ஏற்படும், அதீத தாகம், நாக்குவறட்சி இவற்றைப் போக்கி, உடலுக்கு குளிர்ச்சிதரும் தன்மைமிக்கது சீதாப்பழம்.

unknown node

பெரிய ஆபரேசன்கள் ஆகி, அதிக வீரியம் கொண்ட மருந்துகள் உட்கொள்வதால் உடல் உள்உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

மேலும், ஊறவைத்த வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட, குடற் புண்களையும் ஆற்றும். சீதாப்பழம் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கும்.

சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துப்பொருட்களால், உடலின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தச்சோகை நோயை போக்கும், மேலும் உடல் சோர்வை போக்கி, உடலுக்கு புத்துணர்வு தரும்.

மன நோய் குணமாக சீதாப்பழத்தை இஞ்சிச்சாறு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, அல்லது தனியே சாப்பிட்டுவர, பித்தம் தெளிந்து, மனநோய் குணமாகும். உடல் வலுப்பெற, சீதாப்பழத்தை, திராட்சைப்பழச்சாறு கலந்து ஜூசாகக் குடித்துவரலாம்.

இரவில் சாப்பிட, நல்ல உறக்கம் வரும். சீதாப்பழத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பருகிவர, சிறுநீர் கடுப்பு நீங்கி, சிறுநீர் சீராக வெளியேறும்.