வாக்குறுதி கொடுத்து விட்டு கைவிட்ட விஜய் ரசிகர் மன்றம்;மருத்துவ மாணவி வருத்தம்..!

பூவிருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான நாகராஜனின் மகள் ரங்கீலா பிளஸ் 2-வில் 1058 மதிப்பெண்கள் எடுத்த இவருக்கு கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத

unknown node

பூவிருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான நாகராஜனின் மகள் ரங்கீலா பிளஸ் 2-வில் 1058 மதிப்பெண்கள் எடுத்த இவருக்கு கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. சொத்துக்கள் ஏதும் இல்லாததால் ரங்கீலாவிற்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் எதுவும் முன்வரவில்லை. கடும் சிரமத்திற்கிடையே முதலாம் ஆண்டு படித்து முடித்த இவர், இரண்டாம் ஆண்டு பயிலும் போது பணம் இல்லாததால் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பின்னர் ரங்கீலா படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர் மன்றம் கல்லூரி மேலாளரிடம் பேசி தாங்கள் ராங்கிலாவிற்கு கல்வி கட்டணம் செலுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். பின்னர் விஜய் பிறந்த நாள் அன்று ரங்கீலாவை சென்னைக்கு வரவழைத்து ரங்கீலாவிற்கு உதவி சான்று கொடுப்பது போன்று புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டனர்.

ஆனால் நடிகர் விஜயிடம் இருந்து புகைப்படம் எடுத்தபோதும் உதவி வந்து சேரவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். படிப்பை மேற்கொண்டு தொடர இயலாததால் கிடைத்த கூலி வேலைகளை ரங்கீலா பார்த்து வருகிறார்.