புது டெல்லி:நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் சிறை சாலை ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.மேலும் அரசு நிர்வாகமானது அடிப்படை தேவை திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இருந்து தன்னை விலக்கி கொள்ளவேண்டும் என்று நிதி அயோக் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயல்களால் கல்வி கட்டணம் உயரும்,ஏராளமான முறைகேடுகள் நடைபெறவும் வாய்ப்புள்ளது என அனைத்து கல்வியாளர்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் தெரிவிக்கின்றனர்…
மேலும் நாட்டிலுள்ள அனைத்து பொது நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் இங்கே அரசு என்பது எதற்கு என்ற கேள்வியும் இங்கு தொக்கி நிற்கிறது.