தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்ட் 5–ந்தேதி பனிமயமாதா திருவுருவ பவனி நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் பழமை வாய்ந்த ஆலயமாக பனிமய மாதா ஆலயம் விளங்கி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடு இன்றி வழிபடும் பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் ஏராளமான புறாக்களை பறக்கவிட்டனர்.பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கொண்டு வந்திருந்த பழம், பால் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு கொடுத்தனர்.
பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி சவேரியார் பள்ளி மைதானத்தில் பொருட்காட்சிகள் துவங்க ப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடும் பலவிதமான ராட்டினங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், டெல்லி அப்பளம், உட்பட எண்ணற்ற உணவு ரகங்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.