முருங்கைப்பூ பொரியல் செய்யவது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்: முருங்கைப்பூ - 2 கப் துருவிய தேங்காய் - 1 கப் பச்சை மிளகாய் - 2 சீரகம் - 2 தே.க மஞ்சள் பொடி - ¼ தே.க அல்லது சுவைக்கேற்ப எண்ணெய் -

unknown node

தேவைப்படும் பொருட்கள்:

முருங்கைப்பூ – 2 கப்

துருவிய தேங்காய் – 1 கப்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 2 தே.க

மஞ்சள் பொடி – ¼ தே.க அல்லது சுவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை மஞ்சள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் முருங்கைப்பூ, ¼ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வேகவைத்து இறக்கினால் சுவையான முருங்கைப்பூ பொரியல் ரெடி .