பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக மைக்கேல் ஜாக்சன் பாடல்களை நிறுத்திய "பிபிசி" ரேடியோ!!

This news gives information about "BBC" Radio, which stopped Michael Jackson's songs due to sexual assault-palaiyal kutrasatrin karanamaka michael jackson

மைக்கேல் ஜாக்சன் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

அதனால் மைக்கேல் ஜாக்சனின்  பாடல்களை கடந்த மாதம் 24-ந் தேதிக்கு பிறகு “பிபிசி” ரேடியோவில் நிறுத்தினர்.

உலகின் “பாப்” பாடல்களுக்கு மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் சிறுவர்களாக இருந்தபோது  பலமுறை மைக்கேல் ஜாக்சன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என  குற்றம் சாட்டினார்கள்.

இது தொடர்பாக “லீவிங் நெவர்லேண்ட்” என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இப்படத்தை மைக்கேல் ஜாக்சன் உறவினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மைக்கேல் ஜாக்சன்  மீதான பாலியல் குற்றச்சாட்டையும் மறுத்தனர்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக மைக்கேல் ஜாக்சனின்  பாடல்களை கடந்த மாதம் 24-ந் தேதிக்கு பிறகு “பிபிசி” ரேடியோவில் ஒலிபரப்பப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.