இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர்களில் ஆன்டி முர்ரே மிகவும் சிறப்பானவர். இவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக மெல்போர்னில் அவர் நிருபர்களிடம் பேசிய அவர், கடந்த 20 மாதங்களாக இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வருகிறேன். இனிமேலும் என்னால், வலியைத் தாங்கி கொள்ள முடியாது.
unknown nodeகாயம் குணமடைந்து விடும் என்றே நினைத்தேன். ஆனால் குணமடையவில்லை. இதனால் வேதனை அதிகமாக உள்ளது. முதலில் எனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு எனது காயம் இடங்கொடுக்கவில்லை. அதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரே தனது கடைசி போட்டியாக இருக்கலாம்” என்று கண்ணீர் மல்க தனது ஓய்வு முடிவை தெரிவித்தார்.இதனால் இந்த ஓய்வு முடிவு இவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU.