இன்றைய நவீன உலகில் உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது நம் உடலுக்கு நலமானதா என்று அறிந்து சாப்பிடுவதில்லை. எல்லாம் நவீனமாய் மாறுவது போல நம் உடலில் வரும் நோய்களும் நவீன கருவிகளை பயன்படுத்தி தான் குணமாக்க முடியும் எனற அளவுக்கு நோய்கள் உருவாகின்றன. அப்படி பயன்படுத்தினாலும் அந்த நோய்களுக்கு முழுமையான தீர்வு கிடைப்பதில்லை.
இப்படிப்பட்ட நோய்கள் வருவதற்கு காரணம் என்ன ? என்றைக்கு நாம் இயற்கையான உணவுகள், பழங்களை தவிர்க்க ஆரம்பித்தோமா அன்றிலிருந்தே இந்த நோய்கள் நமக்குள் உருவாக தொடங்கி விட்டன.
unknown nodeஇன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுப்பதற்கு கொய்யாப்பழம் சிறந்த மருந்தாகும். மற்ற பழங்களை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக்கொய்யாவில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளது. தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
வைட்டமின் டி மற்றும் சி , கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. கொய்யாப்பழத்தை உண்பதால் பல நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.