#Breaking:திருமங்கலத்தில் நடந்து முடிந்த 8வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை...!

AIADMK candidate RP Udayakumar is leading in the 8th round in the Thirumangalam constituency.

திருமங்கலம் தொகுதியில் நடந்து முடிந்த 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார்,திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் EVM மெஷின்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 145  தொகுதிகளிலும்,அதிமுக 88 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில்,திருமங்கலம் தொகுதியில் நடந்து முடிந்த 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட 661 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதற்குமுன்,கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிபிடத்தக்கது.