கொரோனா தீவிரமாக பரவ தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை எதிர்த்து,தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,தேர்தல் ஆணையம் தாங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர். கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும்,தேர்தல் ஆணையம் மீது ஏன் கொலைப்பழி சுமத்தக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம்,தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் […]
வாக்கு எண்ணிக்கையின் 2 மணி நிலவரப்படி,திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும்,அதிமுக 74 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில்,இன்று காலை 8 மணியிலிருந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் 2 மணி நிலவரப்படி,திமுக போட்டியிட்ட 173 தொகுதிகளில் 119 தொகுதிகள் முன்னிலையில் உள்ளன.மேலும்,திமுகவின் கூட்டனி கட்சிகளான காங்கிரஸ் 16 தொகுதிகளிலும்,விடுதலை சிறுத்தை,மதிமுக கட்சி 4 தொகுதிகளிலும்,சிபிஐ(எம்),இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லீம் […]
திருமங்கலம் தொகுதியில் நடந்து முடிந்த 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார்,திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் EVM மெஷின்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை […]
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை சட்டப்பேரவையின் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதாவது,முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14 வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால் […]
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில்,திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது,இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் […]
தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்த நிலையில்,தற்போது மின்னணு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.இதனையடுத்து,இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.இதில் திமுக 14 தொகுதிகளிலும்,அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனைத் […]
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1,14,591வாக்குகள் பெற்று அதிரடி வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 72773 வாக்குகள் பெற்று பின்னணியில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 3110 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக முதலவர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி […]
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நாங்குநேரி தொகுதியில் 33, 385 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஆண்டுகள் கழிந்துவிட்டன. உள்ளாட்சி உறுப்பினர்களே இல்ல்லாமல் தமிழகம் இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்க்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒக்டோபர் 31 வரை கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது,
தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் பல்வேறு கட்டங்களாக எண்ணப்பட்டது.அதில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 29,790 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார் . அதிமுக 71,332 திமுக 41,542 வித்தியாசம் 29,790