"பிக்பாஸ் 2விலிருந்து வெளியேறுகிற மும்தாஜ்"என்ன மும்தாஜ் வெளியேற்றமா..???

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 10 பேர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 10 பேர் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

unknown node

இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் வெற்றி பெறும் போட்டியாளர் நிகழ்ச்சியின் இறுதி வாரத்திற்கு நேரடியாக செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொருக்கும் குவளை நிறைய தண்ணீர் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தை சுற்றி வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

unknown node

இந்த டாஸ்க்கில் விஜயலட்சுமி, யாஷிகா, ஜனனி ஆகியோர் இறுதிச்சுற்று வரை போராடினர். ஒருகட்டத்தில் விஜயலட்சுமி வெளியேற ஜனனியும், யாஷிகாவும் விடாமல் போராடினர். இறுதியாக ஜனனி, இந்த போட்டியில் வெற்றிப் பெற்று இறுதிவாரத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

unknown node

ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களின் வாக்குகளை பொறுத்து, ஒருவர் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற்றப்படுவது வழக்கம். வீட்டில் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை பொறுத்தே மக்கள் வாக்களிப்பர்.

unknown node

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ ஒன்றையும் நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் வெளியேற்றப்படவுள்ள நபரின் பெயர் அடங்கிய அட்டையுடன் தோன்றும் கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்களிடையே உரையாடல் நிகழ்த்துகிறார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவாரத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனனிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

unknown node

அதனை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு கமல் இந்த வார நாமினேஷனில் உள்ளவர்களில் இருந்து ஒருவரை எலிமினேட் ஆகாமல் பாதுகாக்க வாய்ப்பு அளித்தார். அதன் அடிப்படையில் எல்லோராலும் ரித்விகா எலிமினேசனில் இருந்து பாதுகாக்கப்பட்டார். இந்நிலையில் மும்தாஜ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடும்.ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்த மும்தாஜ் பிக்பாஸ்2 இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

DINASUVADU