அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ரூஸ்வெல்ட் தீவு ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர்....!!

A helicopter carrying 6 people on the island of Roosevelt, New York, crashed into the river at seven o'clock last night. The helicopter has lost control of the signal engine and has fallen into the river. First one was recovered after an hour-long battle of firefighters and rescue crew, who was admitted to hospital in the worst case. Following the rescue operation, three rescued were reported and two were killed.

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ரூஸ்வெல்ட் தீவில் நேற்று இரவு ஏழு மணியளவில் 6 பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது.பின்னர் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினரின் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு முதலில் ஒருவர் மீட்கப்பட்டார், அவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நடந்த மீட்புப் பணியில் தொடர்ந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.