கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என உத்தரவிட்டிருந்தது. அந்த தடை உத்தரவையும் மீறி கடலூர் தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் 2 படகில் சென்ற போது 2 படகுகள் கவிழ்ந்து சித்திரைப்பேட்டை அருகே விபத்து ஏற்பட்ட நிலையில், மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பிறகு கடலுக்கு அருகிலிருந்த ஜெட்டா என்கிற தனியார் துறைமுகத்தில் தஞ்சம் […]
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா அந்தாரேவை அழைத்துச் செல்வதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது இந்நிலையில், அவர் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக, தற்காலிக ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது, கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி […]
Mamata Banerjee : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுகையில் ஹெலிகாப்டருக்குள் இடறி விழுந்தார். மக்களவை தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி இன்று தனது பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்படுகையில் தவறி விழுந்துள்ளார். துர்காபூரில் தனது கட்சி பிரச்சாரத்தை முடித்து கொண்டு, அடுத்தகட்ட பிரச்சாரத்திற்கு செல்ல அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டரில் மம்தா ஏறினார். அப்போது நிலை […]
Election2024: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தடுக்கும் வகையில் தேர்தல் பிறகும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையில், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் […]
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் , விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு வழியாக செலவதற்கு பதிலாக தவறான பாதையில் சென்றது. இதனையடுத்து, ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ATC) பைலட்டை எச்சரித்த பின்னர் பாதை மாற்றப்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு செல்லும்போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாதையை திருப்பிய பின் பாதுகாப்பாக அரக்கு […]
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டேவிட் வார்னர் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்துகொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். கொரோனா பரவல் காலகட்டத்தில் எல்லாம் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் செய்துகொண்ட வீடியோக்களை வெளியீட்டு வந்தார். அவருடைய வீடியோவும் அந்த சமயம் மிகவும் வைரலாகவும் செய்தது. அந்த வகையில், தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வார்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் […]
அர்ஜென்டினாவில் கால்பந்தாட்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று அணிவகுத்து சென்றபோது கூட்டம் அதிகமானதால் ஹெலிகாப்டர் மூலமாக வீரர்கள் மீட்கப்பட்டனர். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. உலக கால்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பிய வீரர்களை வரவேற்க்க அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் மக்கள் வீதியெங்கும் திரண்டனர்.ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அவர்களை வாழ்த்தி வரவேற்றனர். […]
தருமபுரி ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என மனு. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (57) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வித்தியாசமான மனு ஒன்று அளித்துள்ளார். அதில் தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தங்களுக்கு நடந்து செல்ல வழி விடாமல் வீட்டின் நான்கு புறமும் அக்கம் பக்கத்தினர் சுற்றுச்சுவர் எழுப்பியதால் கடந்த நான்கு […]
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து,வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல்ராஜ் சர்மாவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI கூறுகையில்:”உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.அதன்பின்னர்,வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை […]
ஈரோடு அருகே நடுவானில் பறந்தபோது வானிலை காரணமாக மலைக் கிராமத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர். பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு தம்பதி பயணம் செய்த தனியார் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக திடீரென தரையிறக்கப்பட்டது. ஈரோடு அருகே நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட மோசமான வானிலையால் கடம்பூர் மலைப் பகுதியில் அவசரமாக திடீரென தரையிறக்கப்பட்டது. இதனைதொடர்த்து ஹெலிகாப்டரில் பயணம் […]
ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஷிவ்கர் தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இரண்டு நபர்கள் இருந்ததாகவும், உதம்பூர் பகுதியில் கடும் மூடுபனி காரணமாக அப்பகுதியில் பார்வை குறைந்துள்ளதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக […]
ரஷ்யாவில் 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்ய நாட்டு அவசர சேவைப்பிரிவுகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவின் தூர கிழக்கு கம்கட்சா பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று குரில் ஏரியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர். 3 பணியாளர்கள் மற்றும் 13 சுற்றுலா பயணிகள் இதில் சென்றுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். மேலும், இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் […]
கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை பைலட் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள டிஸ்டேல் நகரின் மத்தியில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மருத்துவ ஆம்புலன்ஸ் வண்ணம் பூசப்பட்ட நிலையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர், அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்துள்ளனர். இதன் பின்பு இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய […]
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவருக்கு பலத்த காயமடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். […]
அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை, என்னுடைய பணத்தில் தான் சென்றேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.தங்கவேலு வேட்பாளராக போட்டியிடுவதால் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் சென்று தங்கவேலு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், குறுகிய காலத்தில் மக்களை விரைவாக சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதால் தான், நான் ஹெலிகாப்டரில் சென்றேன் என தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் என்பது எனக்கு தேவையில்லை, நான் பேருந்தில் பயணம் […]
30 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ள நிலையில், இது தனது பால் வியாபாரம் மற்றும் வணிக பயன்பாட்டுக்காக என விவசாயி கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிவாண்டி எனும் நகரத்தை சேர்ந்த ஜனார்த்தன் போயிர் என்பவர் ஒரு விவசாயி மட்டுமல்லாமல், அவர் வணிக தொழில் செய்து வருபவராகவும் இருக்கிறார். விவசாயிகள் பலர் எளிமையான வாழ்க்கைய வாழ்ந்து வந்தாலும் ஜனார்த்தன் தான் உழைத்து முன்னேறிய பணத்தை வைத்து […]
சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி வரவேற்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா […]
வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை பார்வையிட்டார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடாக்கு அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த […]
கோவை மாவட்டம் வட்டமலை பாளத்தில் வாடகை ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் சேவை அவர்களது சொந்த தேவைக்காக வாடகைக்கு தரப்படுகிறது. இந்த நிலையில் அதற்கான வாடகையை தந்தால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நோயாளிகளின் அவசர சேவை உறுதியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது குறித்து ஹெலிகாப்டர் இயக்குனர் சதீஷ் சதீஷ் குமார் கூறுகையில், ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் பயணிகள் காய்ச்சல் சளி இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பிறகு கிருமி […]
பேரனின் திருமணத்திற்காக பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பாலக்காட்டில் இருந்து வந்த தாத்தா பாட்டியின் அசத்தலான செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. தொலைதூர பயணம் என்றாலே கார்கள் அல்லது பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவை சேர்ந்த வயதான கே என் லட்சுமி நாராயணன் மற்றும் சரஸ்வதி ஆகிய வயதான தம்பதியினர் தனது பேரனின் திருமணத்திற்கு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் வருவதற்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள எண்ணி ஹெலிகாப்டரில் ஆகாயமார்க்கமாக பறந்து வந்துள்ளனர். கேரளாவின் […]