திருச்செந்தூரில் டாஸ்மார்க் கடையை மூடும் போராட்டத்தில் 9 பெண்கள் கைது....!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரிக்கு மிக அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானகடையை தமிழக அரசு திறந்தது. இதற்குஎதிர்ப்பு

unknown node

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரிக்கு மிக அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானகடையை தமிழக அரசு திறந்தது. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கானபெண்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மதுக்கடை மூடப்பட்டது.இதனிடையே நேற்று கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடைக்கலாபுரம்பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர், கூட்டம் குறைவாக இருந்தது. எனவே பெண்களில் 9 பேரையும் திருச்செந்தூர் போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.அன்று மாலையில் விடுவித்தனர்.டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவுசெய்துள்ளனர்.