unknown node
பி.இ., – பி.டெக்., முடித்த மாணவர்கள், மத்திய அரசின், ’கேட்’ அல்லது மாநில அரசின், ’டான்செட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, முதுநிலை படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆக., 20 முதல், 23 வரை நடந்தது. மொத்தம், 300க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 19 ஆயிரத்து, 677 இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 4,985 பேர் தகுதி பெற்றனர்; 1,359 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.இதனால் 82 சதவீத இடங்கள் காலியாக உள்ளது. இதனால், இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.