கொச்சி: நடிகை பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், ஏற்கனவே மூன்று நடிகைகளை கடத்த திட்டமிட்டு இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2011ல் நடந்த சம்பவம் கேரளாவில் செயல்பட்டு வரும் இசை நிறுவன உரிமையாளர் ஜானி சகாரியா என்பவர், 2011ம் ஆண்டு, ‘ஒர்கூட் ஒரு ஊர்மகூட்’ என்ற மலையாள படத்தை தயாரித்தார். அப்போது சகாரியாவின் கார் டிரைவராக பல்சர் சுனில் பணியாற்றியுள்ளான். அந்த சமயத்தில், ஒரு இளம் நடிகையை கடத்த பல்சர் சுனிலும், அவனது கும்பலும் திட்டமிட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் தனது பயண திட்டத்தை அந்த இளம் நடிகை மாற்றி விட்டார். எனவே, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மூத்த நடிகை ஒருவரை பல்சர் சுனில் கும்பல் படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றது. ஆனால், பாதி வழியில் கார் திசை மாறி சென்றதை அறிந்த அந்த மூத்த நடிகை, தனது கணவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். நடிகையின் கணவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர். அவர் விரைந்து செயல்பட்டு மனைவியை காப்பாற்ற முயற்சிக்க, பல்சர் சுனில் கும்பல் அந்த மூத்த நடிகையை குமரகம் சுற்றுலா தலத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன் இறக்கி விட்டு தப்பி விட்டது. இந்த சம்பவம் குறித்து சகாரியா போலீசில் புகார் அளித்துள்ளார்.3 நடிகைகளை கடத்த திட்டம் இது தொடர்பாக, பல்சர் சுனில் கும்பலிடம் இருந்து தப்பிய நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு பல்சர் சுனிலின் கூட்டாளி சுனீஷ் என்பவனை கைது செய்துள்ளனர். இவன், கன்னூர் மாவட்டத்தில் உள்ள படிசால் என்ற இடத்தை சேர்ந்தவன். நடிகையை கடத்த முயன்ற போது அவர்கள் சென்ற வாகனத்தின் டிரைவராக பணியாற்றியவன்.இந்த வழக்கில், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை பாவனா சம்பவத்திற்கு முன், பல்சர் சுனில் மூன்று நடிகைகளை கடத்த பல்சர் சுனில் திட்டமிட்டு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது என்றும் கேரள போலீசார் தெரிவித்தனர்.
பாவனாவிற்கு முன் 3 நடிகைகளை கடத்த திட்டம் போட்ட பல்சர் சுனில்....அடுத்தகட்ட பரபரப்பு..!
கொச்சி: நடிகை பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், ஏற்கனவே மூன்று நடிகைகளை கடத்த திட்டமிட்டு இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2011ல்
unknown node