12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு ..!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தேர்ச்சி விகிதம் 93.58% எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த முடிவுகள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வினை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 93.58% ஆக உள்ளது.மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், பின்வரும் இணையதளங்கள் மூலமாகவும் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்:

அத்துடன், 78452 52525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தேர்வு முடிவுகளைப் பெறலாம். பயின்ற பள்ளிகளிலும் முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் வெளியானதால் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. தேர்வு முடிவுகளுடன் தொடர்புடைய அடுத்தகட்ட அரசு நடவடிக்கைகள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.