'பல்கலைக்கழகத்தில் ஊழல்' "துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு" பரபரப்பு புகார்...!!

கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். தமிழக கல்வித்துறையில்

கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார்.தமிழக கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் , பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் என அன்றாடம் ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் இது முற்றிலும் பொய் என்றே உயர்கல்வித்துறை மறுத்து வந்தது.இந்நிலையில் சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.

unknown node

அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தகுதிகள் அடிப்படையில்  தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும்  நான்  தகுதிகள் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் கல்வித்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

DINASUVADU