சச்சின் சாதனையை முறியடித்த விராட்கோலி ..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி  3 விக்கெட்டை

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி  3 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்தனர்.இப்போட்டியில் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்கள் எடுத்தார்.  பின்னர் இறங்கிய புஜாரா  நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 58 ரன்களுடன் வெளியேறினார்.களத்தில் விராட்கோலி 63 , ரஹானே 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன்களில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களில் தற்போது விராட் கோலி  முதல் இடத்தில் உள்ளார்.இதற்கு முன் சச்சின் 553 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் 600 ரன்கள் எடுத்து சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளார்.கோலி – 600 *சச்சின் – 553தோனி – 461

சச்சின் சாதனையை முறியடித்த விராட்கோலி ..!