வைரல் வீடியோ..! உலககோப்பைக்கு பிறகு வலைப்பயிற்சியில் தோனி ..!

If this doesn’t give you Goosebumps, we don’t know what will.????????

உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் பல தகவல் வெளியானது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற  நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதிக்குப் போட்டி தான் தோனி விளையாடிய கடைசி போட்டி.இதை தொடர்ந்து தோனி கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் காஷ்மீரில் உள்ள ராணுவ படையுடன் சேர்ந்த  ஒரு மாதத்திற்கு மேல் இராணுவத்தில் பயிற்சி பெற்றார்.இதனால் டோனி   வெஸ்ட் இண்டீஸ் , தென்னாபிரிக்கா அணிகளுடனான தொடர்களில் விளையாடவில்லை.இதை தொடர்ந்து தோனி ஓய்வு பெற போகிறார் என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் தோனி தனது ஓய்வை பற்றி ஒன்றும் பேசவில்லை என்பதால் ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.மீண்டும் இந்திய அணியில் தோனி கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில்  எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ ஸ்டேடியத்தில் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

unknown node