“கே.கே.சி. பாலுவிற்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப்பெறுக” – வன்னி அரசு.!

வள்ளி கும்மியை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கோரிக்கை வைத்துள்ளார்.

Vanniarasu - KKC Balu

சென்னை :வள்ளி கும்மியாட்டத்திற்காக கே.கே.சி.பாலு என்பவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. தனது சாதி பெண்களிடம் சொந்த சாதியில் திருமணம் செய்வேன் என சத்தியம் வாங்கியவருக்கு கலைமாமணி விருதா? என பகுத்தறிவாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கே.கே.சி. பாலுவிற்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வள்ளி கும்மியை முன்னெடுத்த KKC பாலு என்பவருக்கு கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வள்ளி கும்மி மூலம் “வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்” என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு. இது குடிபெருமை பேசி, சனாதனத்தைநிலை நிறுதும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும். பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.

பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து KKC பாலு அவர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும் பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும். வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.