விக்கெட் எடுத்து மைதானத்தில் மேஜிக் காட்டிய பந்துவீச்சாளர்..!வைரல் வீடியோ ..!

தென்னாப்பிரிக்காவில் உள்ளுர் போட்டியான  மசான்சி சூப்பர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் நேற்று முன்தினம்போலந்து பூங்காவில் நடந்த லீக் போட்டியில்

தென்னாப்பிரிக்காவில் உள்ளுர் போட்டியான  மசான்சி சூப்பர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் நேற்று முன்தினம்போலந்து பூங்காவில் நடந்த லீக் போட்டியில் பார்ல் ராக்ஸ் Vs டர்பன் ஹீட் ஆகிய இரு அணிகள் மோதினர்.

இப்போட்டியில் முதலில் இறங்கிய பார்ல் ராக்ஸ் அணி 20 ஓவர் முடிவில் இரண்டு  விக்கெட்டை பறிகொடுத்து 195 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய டர்பன் ஹீட் அணி 18.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 197 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

unknown node

இப்போட்டியில் பார்ல் ராக்ஸ் அணி வீரர் தப்ரைஸ் ஷம்ஸி 8-வது ஓவரை வீசினார்.அப்போது அவர் வீசிய பந்தை விஹாப் லுபே மைதானத்தை வெளியே தூக்கி அடிக்க முயற்சி செய்தார் அப்போது பந்து ஹார்டஸ்  கையில் பந்து சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனை கொண்டாடும் விதமாக தப்ரைஸ் ஷம்ஸி தனது பையில் இருந்து ஒரு துணியை எடுத்து அதை குச்சியாக மாற்றி மேஜிக் செய்தார்.இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.