இலங்கையில் நின்று கொண்டி இருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்

This news gives information about The bombs were seized by 87 datanators from a bus in Sri Lanka

இலங்கையில் நேற்று  கொழும்புவில் உள்ள  கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம்,  தெமட்டகொடா குடியிருப்பு பகுதி, கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 உயிர் இழந்தனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது.மேலும் இன்று காலை விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். இதனால் இலங்கையில் பதற்றம் அதிகமாக நிலவியது

தற்போது  இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டி இருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்தனர்.வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.