தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று…!

Default Image

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்தவர் தான் தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை நாயகன் நாகேஷ். இவரது இயற்பெயர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன். 1959 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் புகுந்த இவர், காதலிக்க நேரமில்லை எனும் ஸ்ரீதரின் திரைப்படத்தின் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து, அதன் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  மேலும், 1974 ஆம் ஆண்டில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் எனும் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் வழங்கியது.

தமிழ் திரையுலகில் பல்வேறு முக்கியமான பிரபலங்களுடன் நடித்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்