இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
unknown nodeஇதன்மூலம் இந்த வருடம் ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 50 க்கு மேல் சராசரி வைத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு ஐசிசி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி பாராட்டுத் தெரிவித்தார்.
unknown node