ரசிகர்களால் அனுப்புடன் “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார்.
unknown nodeSneha And Prasanna[Image Source: Instagram ]
41 வயதானாலும் கூட இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அதே அழகுடன் சினேகா அப்டியே இருக்கிறார். அதைப்போல அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் கொஞ்சம் கூட குறையவேயில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை சினேகா மீண்டும் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடிக்க மாட்டாரா என்பது தான்.
இதையும் படியுங்களேன் –ரசிகர்களே கேட்டுக்கோங்க.. பிரியா பவானிசங்கருக்கு இந்த மாதிரி பசங்கள தான் ரெம்ப பிடிக்குமாம்.!
unknown nodeSneha Rose Colour Sudithar [Image Source: Instagram ]
ஏதேனும் புதிய படங்களில் அவர் ஹீரோயினாக நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில், நேற்று சினேகா தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
unknown nodeSneha His Family [Image Source: Instagram ]
இந்நிலையில், சினேகா நேற்று தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அப்போது மேக்கப் போடாமல் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node