PAK vsSL: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டி லாகூரில் உள்ள

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.முதலில் இலங்கை அணி இறங்கியது. தொடக்க வீரர்களாக குணதிலக , பெர்னாண்டோ இருவரும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய குணதிலக அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார்.அதில் 8 பவுண்டரி ,  1 சிக்ஸர் அடங்கும் .பின்னர் நிதானமாக விளையாடிய பெர்னாண்டோ  33 ரன்களுடன் வெளியேறினார்.

unknown node

அடுத்து இறங்கிய ராஜபக்ஷ 32 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.பிறகு களமிறங்கிய அனைத்து  வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக  இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 165 ரன்கள் எடுத்தது.166 ரன்கள் இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரராக பாபர் ஆசாம் ,அகமது ஷெஜாத் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே பாபர் ஆசாம்13 ரன்களில் வெளியேற பின்னர் உமர் அக்மல் ரன் எடுக்காமல் வெளியேறினார்.

unknown node

பிறகு களமிறங்கிய கேப்டன் சப்ராஸ் அகமது 24 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.இறுதியாக பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனால் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நாளை இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.