ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஒலிம்பிக் வில்வித்தை ஆண்கள் தனிநபர் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ்,ரஷ்யாவை சேர்ந்த கல்சன் பஜார்ஜபோவை எதிர்கொண்டார்.
முதல் செட்:
போட்டியின்தொடக்கம் முதலே பிரவீன் ஆதிக்கம் செலுத்தினார். அதன்படி,முதல் செட்டை 29-27 (10-9,9-9,10-9) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
இரண்டாவது செட்:
இதனையடுத்து,இரண்டாவது செட்டை 28-27 (9 -10,9-10,10-7) என்ற கணக்கில் பெற்று பிரவீன் முன்னிலை வகித்தார்.
மூன்றாவது செட்:
இதனைத் தொடர்ந்து,பிரவீன் ஜாதவ் தனது தனிப்பட்ட திறமையால் மூன்றாவது செட்டையும் 28-24 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தை கைப்பற்றினார்.
முன்னேற்றம்:
இதனால்,பிரவீன் 6-0 என்ற கணக்கில் ரஷ்யாவை சேர்ந்த கல்சன் பஜார்ஜபோவை வென்று காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
unknown node