ட்லாக்ஸ்காலா : இந்த ஆண்டிற்கான, வில்வித்தை உலகக்கோப்பைத் தொடரானது மெக்சிகோவில் உள்ள ட்லாக்ஸ்காலாவில் நடைபெற்று வந்தது. இதில், நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் தீபிகா குமார். இந்த நிலையில், இறுதி போட்டியில் சீனாவின் லி ஜியாமனும் எதிர்த்து விளையாடினார். இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த லி ஜியாமன் 6-0 என்ற […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது. உலகநாடுகள் பங்கேற்று நாளை தொடங்கவிருக்கும் மாபெரும் விளையாட்டு தொடரில் நடைபெறும் வில்வித்தை போட்டி தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட பஜன் கவுர் 11 இடமும், அங்கிதா பகத் 22 இடமும் மற்றும் தீபிகா குமாரி 23வது இடமும் பிடித்துள்ளனர். இதனால், புள்ளிகளின் […]
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின் மூலம் பதக்கபட்டியலில் இந்தியாவின் தங்கம் 16 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதியது. இந்தியா சார்பாக வில்வித்தை வீரர்களான ஜோதி சுரேகா […]
பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தியுள்ளார். வில்வித்தையில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 […]
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தோல்வி. டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், கொரியாவின் கிம் மின் சுவை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் வில்வித்தை போட்டியில் அதானு தாஸும்,குத்துச்சண்டையில் அமித் பங்கலும் தோல்வியடைந்துள்ளார்கள். டோக்கியோவில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார். தொடர் வெற்றி: இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற வில்வித்தை தனிநபர் 1/16 எலிமினேஷன் போட்டியில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி 6-5 […]
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியின்,காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியுற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான தீபிகா குமாரி,தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீராங்கனை செனியா பெரோவாவை எதிர்கொண்டார். முதல் செட்: இப்போட்டியில்,தீபிகாவுக்கு இணையாக ரஷ்ய வீராங்கனை […]
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில்,காலிறுதியின் முந்தைய சுற்றில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் தனிநபர் வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் தீபிகா குமாரி,பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொண்டார்.இறுதியில்,மிக எளிதாக 6-0 என்ற கணக்கில் கர்மாவை வீழ்த்தி தீபிகா வெற்றியடைந்தார். காலிறுதியின் முந்தைய சுற்று : மேலும்,இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபருடன் கலந்து […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபர் பிரிவு போட்டியில் தென்கொரியா வீரர் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி,இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில்,ஜூலை 28 ம் தேதி நடைபெற்ற வில்வித்தை பெண்கள் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிக்கு தகுதி பெற்றார். தொடர் வெற்றி: இந்நிலையில்,அவரது கணவரான அதானு தாஸ் இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 […]
ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் காலிறுதியின் முந்தைய சுற்றில்,உலகின் நம்பர் 1 பிராடி எலிசனிடம் போராடி தோல்வியுற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை ஆண்கள் தனிநபர் போட்டியின் இந்தியாவின் பிரவீன் ஜாதவ்,ரஷ்யாவை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரர் கல்சன் பஜார்ஜபோவை இன்று காலை எதிர்கொண்டார். முன்னிலை: போட்டியின் தொடக்கம் முதலே பிரவீன் ஆதிக்கம் செலுத்தினார். அதன்படி,முதல் செட்டை 29-27 (10-9,9-9,10-9) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இதனையடுத்து,இரண்டாவது செட்டை 28-27 (9 […]
டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி காலிறுதிக்கு நுழைந்துள்ளார். இன்று டோக்கியோவில் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் ஆண்கள் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கு கொண்டு தோல்வியை அடைந்தனர். மேலும், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு செல்லவில்லை. அதற்கு […]
ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக் வில்வித்தை ஆண்கள் தனிநபர் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ்,ரஷ்யாவை சேர்ந்த கல்சன் பஜார்ஜபோவை எதிர்கொண்டார். முதல் செட்: போட்டியின்தொடக்கம் முதலே பிரவீன் ஆதிக்கம் செலுத்தினார். அதன்படி,முதல் செட்டை 29-27 (10-9,9-9,10-9) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்: இதனையடுத்து,இரண்டாவது செட்டை 28-27 (9 -10,9-10,10-7) என்ற கணக்கில் பெற்று பிரவீன் முன்னிலை வகித்தார். மூன்றாவது செட்: […]
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் வில்வித்தை காலிறுதி போட்டியில் கொரிய அணியிடம்,இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் வில்வித்தை போட்டியில் 16 அணிகள் கொண்ட சுற்றில் இந்தியாவின் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ் மற்றும் தருந்தீப் ராய் ஆகியோர் கொண்ட அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டனர்.இதில் வெற்றிபெறும் அணியானது எட்டு அணிகள் கொண்ட காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவர். காலிறுதிக்கு முன்னேற்றம்: போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 55 புள்ளிகள் பெற்ற நிலையில், கஜகஸ்தான் […]
தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். மாநில அளவிலான இண்டோர் ஆர்சாரி கோப்பைக்கான வில்வித்தை போட்டி தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் சேலம், நாமக்கல், தருமபுரி கோவை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடந்த வில்வித்தை போட்டியில் 10, 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட வீரர்கள் […]