முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு பிறகு மழையோ மழை தான்.! அமைச்சர் துரைமுருகன் புகழாரம்.!

Default Image

கடந்த சில வருடங்களாக பெய்யாத மழை, முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வெள்ளம் வரும் அளவுக்கு மழையோ மழை என பெய்து வருகிறது. – அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளார். 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்களை கடந்து 3வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இதில், சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்கள் தொகுதி பிரச்சனைகளை சட்டமன்றத்தில் தெரிவித்தனர். அதற்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வந்தனர்.

அப்போது, கடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக கரைகள் உடைப்பு ஏற்பட்டன, இந்த ஆற்றின் கரைகளை சீரமைத்துத் தர வேண்டும் என கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘ கடந்த சில வருடங்களாக பெய்யாத மழை, முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வெள்ளம் வரும் அளவுக்கு மழையோ மழை என பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் எந்த இடம் முக்கியமானதோ அதை உடனடியாக சரி செய்து தருவோம்.’ தனது துறை சார்பாக பதில் கூறினார் அமைச்சர் துரைமுருகன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்