உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான "பாலன் டி’ஓர்" விருது;7 வது முறையாக தட்டிச்சென்ற மெஸ்ஸி!

Lionel Messi of Argentina has won the Ballon d'Or for the 7th time.

பாரிஸ்:உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலன் டி’ஓர்” விருதை 7 வது முறையாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றுள்ளார்.

Ballon d’Or 2021 என்பது மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க கால்பந்து விருது விழாக்களில் ஒன்றாகும். இதில் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பாலன் டி’ஓர்”  Ballon d’Or 2021 விழா பிரெஞ்ச் கால்பந்து கூட்டமைப்பால் (FFF) ஏற்பாடு செய்யப்படும். இதில் உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக “பாலன் டி’ஓர்” விழா ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில்,நேற்று இரவு “பாலன் டி’ஓர்”  Ballon d’Or 2021 விருது விழா பிரான்சின் பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட்டில் நடைபெற்றது.இந்த விழாவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கான பலோன் டி’ஓர் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,2021 ஆம் ஆண்டும் “பாலன் டி’ஓர்” விருதை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.கடந்த 2000 ஆம் ஆண்டில் பார்சிலோனா அணியில் இணைந்த மெஸ்ஸி இதுவரை 6 முறை பலோன் டி’ஓர் விருதை பெற்ற நிலையில்,தற்போது 7 வது முறையாக மீண்டும் பாலன் டி’ஓர் விருதை தட்டிச் சென்று சாதனை புரிந்துள்ளார்.

unknown nodeunknown node

கால்பந்து உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, இந்த ஆண்டு பார்சிலோனா கிளப்பில் இருந்து பிரிந்தபோது ​​மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்கள் உடைந்தன. தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் பார்சிலோனாவுக்காக மட்டுமே விளையாடிய மெஸ்ஸி, தற்போது பாரிஸ் செயிண்ட்- ஜெர்மெய்ன்(PSG) அணிக்காக விளையாடி வருகிறார்.

அதேபோல,பெண்களில் சிறந்த காற்பந்து விளையாட்டாளராக ஸ்பெயினின் அலெக்ஸியா புட்டெல்லா (Alexia Putella)தேர்ந்தெடுக்கப்பட்டு,அவருக்கு  Ballon d’Or-விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான "பாலன் டி’ஓர்" விருது;7 வது முறையாக தட்டிச்சென்ற மெஸ்ஸி!