உலகக்கோப்பை வெற்றியின்போது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கியை வாங்க விருப்பம் தெரிவித்த ஓமன் எம்.பி. கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்ற அர்ஜென்டினா மற்றும் வீரர்களுக்கு உலகக்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸிக்கு, அரபு நாட்டில் அணியப்படும் பிஷ்ட் எனும் கருப்பு நிற அங்கியை கத்தார் மன்னர் வழங்கினார், மேலும் மெஸ்ஸி இந்த அங்கியை(பிஷ்ட்டை) அணிந்துகொண்டு கோப்பையை வாங்கினார். பிஷ்ட் என்பது அரபு நாடுகளில் பிரபலமான ஒரு பாரம்பரிய […]
பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் […]
ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார். கத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி இந்த உலககோப்பையின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லியோனல் மெஸ்ஸி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். மெஸ்ஸி அதிக உலககோப்பைகளில் பங்கேற்று அதாவது 26, ஃபிஃபா உலகக் கோப்பைகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் 19 உலகக் கோப்பை […]
தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் கூறியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றதற்கு மெஸ்ஸி முக்கிய காரணம் வகித்தார். இறுதி போட்டியிலும், மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையின் அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுகிறார். போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரரானார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-0 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி, குரோசியா அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் […]
அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் வருகையால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்கு ஒரு வருடத்தில் 700 மில்லியன் யூரோக்கள் வருமானம் கிடைத்துள்ளதாக ஸ்பெயினின் பிரபல பத்திரிக்கை “மார்க்கா (Marca)” தெரிவித்துள்ளது. மேலும், மெஸ்ஸியின் அணி மாற்றத்தால் புதிய 10 ஸ்பான்சர்களையும், ஸ்பான்சர்ஷிப் கட்டணம் 3 மில்லியனில் இருந்து 8 மில்லியன் யூரோக்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அர்ஜென்டினாவின் தினசரி பத்திரிக்கை எல் எகனாமிஸ்டா அறிவித்துள்ளது. நைக்(NIKE) உடனான பிஎஸ்ஜி (PSG) இன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் […]
தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக ஃபைனலிசிமா(கிராண்ட் ஃபைனல்) கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஃபைனலிசிமா’ கால்பந்து இறுதிப் போட்டியானது அர்ஜென்டினா-இத்தாலி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதன்படி,ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் லாடரோவும் மற்றும் 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவும்,94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலாவும் கோல் அடித்து அசத்தினர்.இதனால,இப்போட்டியில்,அர்ஜென்டினா அணியானது 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன்ஸ் […]
பாரிஸ்:உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலன் டி’ஓர்” விருதை 7 வது முறையாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றுள்ளார். Ballon d’Or 2021 என்பது மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க கால்பந்து விருது விழாக்களில் ஒன்றாகும். இதில் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பாலன் டி’ஓர்” Ballon d’Or 2021 விழா பிரெஞ்ச் கால்பந்து கூட்டமைப்பால் (FFF) ஏற்பாடு செய்யப்படும். இதில் உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் […]
உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகி,பாரிஸ் செய்ண்ட் ஜெர்மன்(PSG) அணியில் இணைந்துள்ளார். அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கிடையில்,அடுத்த் ஆண்டு நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலக […]
பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்றபோது,லியோனல் மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ பேப்பர் 1 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சினை காரணமாக பார்சிலோனா அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று விலகினார். 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா அணியில் இருந்து விடைப்பெறும் முன் செய்தியாளர்களை சந்தித்த மெஸ்ஸி, “இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது […]