ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில் இந்திய வீரர்கள் 4 வது இடம் பிடித்துள்ளனர்.
ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில்,முகமது அனஸ்,நிர்மல்,அமோஜ் மற்றும் தமிழகத்தின் ஆரோக்கிய ராஜ்,உள்ளிட்ட 4 பேர் கொண்ட இந்திய அணி, 4 வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.இருப்பினும், இந்திய அணி 3:00.25 என்ற கணக்கில் ஓடி ஒலிம்பிக்கில் புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளது.
unknown nodeunknown node