ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில் இந்திய வீரர்கள் 4 வது இடம் பிடித்துள்ளனர். ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில்,முகமது அனஸ்,நிர்மல்,அமோஜ் மற்றும் தமிழகத்தின் ஆரோக்கிய ராஜ்,உள்ளிட்ட 4 பேர் கொண்ட இந்திய அணி, 4 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.இருப்பினும், இந்திய அணி […]
உலகின் மின்னல் வேக மனிதர் எனக்கூறப்படும் உசைன் போல்ட்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஜமைக்கா பிரதமர் தெரிவித்தார். ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒட்டப்பந்தயங்களின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 9.58 வினாடியில் 100 மீட்டர் ஓட்டத்தை கடந்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்று யாரும் படைக்காத சாதனையை படைத்தார். இந்நிலையில், உசைன் போல்ட் […]
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 32 வயது ஷெல்லி என்ற பெண் கலந்து கொண்டு 10.71 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இவர் இதற்கு முன் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் 2009 , 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றார். குழந்தை பெற்றதால் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் […]
வேகப் புயல் உசேன் போல்டுக்கு ஓய்வு பெற்ற பிறகு முதல் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி கத்தார் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் 100 மீட்டர் இலக்கை 9.76 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். நடப்புச் சாம்பியனான மற்றொரு அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.கனடா வீரர் ஆண்ட்ரே டி கிராஸி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் தோஹாவில் நடைபெற்ற தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்ந்து தந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோமதி மாரிமுத்து ,2012-ம் ஆண்டு தான் ஒலிம்பிக் என்றால் என்னனு தெரியும். 2010-ம் ஆண்டு நான் ஒரு நல்ல வேலைக்கு தான் போகணும் முடிவு செய்தேன்.என் அப்பா 2016-ல் இறந்துட்டாரு இவர் இறந்த அடுத்த ஒரு மாதத்தில் என்னோட பயிற்சியாளரும் இறந்துட்டாரு , […]