டோக்கியோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார்.
இப்போட்டியில்,பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில்,பிரவீன் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.எனினும்,2.07 மீ தாண்டியதன் மூலம் புதிய ஆசிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம் , 6 வெள்ளி , 3 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node