தென்னாப்பிரிக்கா அணிக்கு 395 ரன்கள் இலக்காக வைத்த இந்தியா..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 176 , அகர்வால் 215 ரன்கள் அடித்தனர்.தென்னாப்பிரிக்கா அணியில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டை பறித்தார்.இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் குவித்து இருந்தது.இதை தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய தென்னாபிரிக்க அணி 431 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.

unknown node

அதிகபட்சமாக டீன் எல்கர் 160 , குவின்டன் டி காக் 111 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டை பறித்தார்.இந்நிலையில் 71 ரன்கள் வித்தியாசத்துடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை இன்று தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே மாயங்க் அகர்வால் 7 ரன்னில் வெளியேற பின்னர் புஜாரா , ரோஹித் இருவரும் கூட்டணியில் இனைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தனர்.சிறப்பாக விளையாடிய புஜாரா அரைசதம் அடித்து 81 ரன்கள் எடுத்தார்.பின்னர் தொடர்ந்து விளையாடிய ரோஹித் முதல் இன்னிங்சை போல சதம் விளாசி 127 ரன்கள் குவிர்த்தார்.

unknown node

அடுத்து இறங்கிய ஜடேஜா அரைசதம் அடிக்காமல் 40 ரன்களுடன் வெளியேறினர்.இறுதியாக இந்திய அணி 67 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 323 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. களத்தில் ரஹானே 27 , கோலி 31 ரன்களுடன் இருந்தனர்.இதனால் இந்திய அணி 395 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக வைத்தது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 395 ரன்கள் இலக்காக வைத்த இந்தியா..!