கண் இமைகள் வெகுவாக வளர சில வழிமுறைகள்.
இந்த இரண்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
இளம் பெண்களை பொறுத்தவரையில், அவர்கள் தங்களது இமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த பதிவில் கண் இமைகள் வெகுவாக வளர என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
ஆமணக்கு எண்ணெய்
unknown nodeதினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவி வந்தால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடனும், அழகாகவும் காணப்படும்.
வைட்டமின் ஈ எண்ணெய்
unknown nodeதினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்தும் சீவலாம். வேண்டுமென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம்.
இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளர்ந்து அழகாக காட்சியளிக்கும்.