ரொனால்டோவை தொடர்ந்து பீர் பாட்டிலை அகற்றிய கால்பந்து வீரர் பால் போக்பா..! வைரலாகும் வீடியோ..!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பால் போக்பா பீர் பாட்டிலை அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பால் போக்பா பீர் பாட்டிலை அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கொக்கோ கோலா பாட்டிலை ஒதுக்கி வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை முன் வைத்தார். அது மிக பெரிய அளவில் வைரலானது. தற்போது அதனை தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பால் போக்பா என்ற பிரபல கால்பந்து வீரர் செய்த செயல் பெரும் பிரபலமாகி வருகிறது.

இவர் இன்று விளையாடும் போட்டிக்கு முன்னதாக கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் இவருக்கு முன் இருந்த ஹெனிக்கென் பீர் பாட்டிலை கண்ணில் படாதவாறு அகற்றி வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node